சென்னை: பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த நூலை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பெற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் 12.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 5 விடுதி புதிய கட்டிடங்கள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
அவற்றில் மதுரை மாவட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பில். திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பாட்டியில் ரூ.2.53 கோடி மதிப்பில் 2 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மொத்தம் ரூ.6.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கூடுதல் கழிவறைகள் மற்றும் ஆழ்த்துணை கிணறு ஆகியவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தலைமை செயலாளர் மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
The post பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.