×

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தும் மத வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு எதிராக உள்ளது என தெரிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சச்சிதேவா என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது.

எனவே இதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மத வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. அச்சமயம், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருதி அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளனர்.

The post சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Minister Assistant ,Stalin ,Supreme Court ,Delhi ,Minister ,Assistant ,Sanadhanam ,Sanadanam ,
× RELATED நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி...