×

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியீடு..!!

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி காட்சி வெளியானது. கொள்ளையன் முகக்கவசம் அணிந்தபடி நகைகளை திருடும் காட்சி வெளியாகியுள்ளது. சுவரில் துளையிட்டு பைப் வழியாக கடைக்குள் நுழைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். இந்நிலையில் கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகைக்கடையில் நேற்று தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளை போயின. 8 ரிங்குகள், 5 தாலிக்கொடிகள், 5 நக்லஸ், 3 ஜோடி ஸ்டட்கள், 1 டாலர் ஆகிய வைர நகைகள், 2 செயின்கள், 12 ப்ரேஸ்லெட்கள் ஆகிய பிளாட்டினம் நகைகள், 35 செயின்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நெக்லஸ்கள், 30 கல் பதிந்த நக்லஸ் நகைகள் ஆகிய தங்க நகைகள்,27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் செயின்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள் ஆகிய தங்க நகைகள், 18 தாலிகள் , 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 சைன்(18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்) ஆகிய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சியில் இருந்து பேருந்தில் வந்து கொள்ளையடித்துவிட்டு மீண்டும் பேருந்திலேயே கொள்ளையன் தப்பிச்சென்றதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Goi José Alucas ,JOSÉ ÁLUCAS JEWELRY STORE ,Kowai Gandhipuram Road ,José Álucas ,Goa ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று...