×

மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்தார். காசநோய் மருத்துவமனையில் புதிய கட்டுமானத்துக்காக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு கட்டுமான பணி முடிந்து சுபாஷ், சக ஊழியர் சனி ஆகியோர் காய்கறி, பழங்கள் வாங்க கடைக்கு சென்றனர். தோப்பூர் அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிக்காக வந்த வடமாநில தொழிலாளி சுபாஷை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

மர்மநபர்கள் 3 பேர், வடமாநில தொழிலாளர்கள் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். செல்போன், பணத்தை தரமறுத்ததால் 2 பேரையும் கத்தியால் குத்திவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளி சனி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக்கில் தப்பி சென்ற 3 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Topur ,Madurai ,North ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...