×

ரேஷன் அரிசி பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சாவூர், நவ.29: தஞ்சாவூரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாநகரம் கீழவாசல் சின்னையாபிள்ளை தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் ஹாஜா என்ற ஹாஜாமைதீன் (44). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக ஏராளமான வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் ஹாஜாமைதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மத்திய மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி சுஜாதா, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ஹாஜாமைதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ரேஷன் அரிசி பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Municipality ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...