×

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 27 மின் இணைப்புகள்

தஞ்சாவூர், நவ.29: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024ம் ஆண்டு இலக்கீட்டின் படி தாட்கோ திட்டத்தில் 27 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தஞ்சாவூர் மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நளினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பழுதான மின் மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் 39 புதிய மின் மாற்றிகள் ரூ.1 கோடியே 36 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2023-2024ம் ஆண்டு இலக்கீட்டின் படி தாட்கோ திட்டத்தில் 27 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கீட்டின் படி 350 சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் 31 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு இலக்கீட்டின் படி தட்கல் திட்டத்தில் 361 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 27 மின் இணைப்புகள் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Thanjavur district ,Thanjavur ,Dinakaran ,
× RELATED மீன் பிடிக்க தொழிலாளர்கள் ஆர்வம்...