×

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 3.25 லட்சம் டன் கரும்பு அரவைக்கான ஆயத்த பணி பள்ளி பருவத்திலேயே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும்

அரியலூர்,நவ.29: பள்ளி பருவத்திலேயே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆர்டிஓ ராமகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் மாணவர்களின் கற்றல் திறனை ஆர்டிஓ ராமகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இந்திய அளவில் நடைபெறும் தேசிய திறனறி மற்றும் வருவாய் வழி தேர்வில் கடந்தாண்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆர்டிஓ ராமகிருஷ்ணன், நிகழாண்டில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தங்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்பள்ளியில் கணினி மூலம் தேசிய திறனறி மற்றும் வருவாய் வழி தேர்வுக்கு மாணவர்களுக்கு இணைய வழி பயிற்சி வழங்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இதனால் மாணவர்களின் திறன் மேம்பட்டு மாணவர்கள் தேர்வுகளில் மிக எளிதில் வெற்றி பெறலாம் என்றார். இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் மற்றும் ஆசிரியர்கள்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 3.25 லட்சம் டன் கரும்பு அரவைக்கான ஆயத்த பணி பள்ளி பருவத்திலேயே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ariyalur ,RTO ,Ramakrishnan ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை