×

கலெக்டர் அறிவுறுத்தல் மயிலாடுதுறையில் வரதட்சணை ஒழிப்பு தின பேரணி

மயிலாடுதுறை,நவ.29: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக வளாகத்தில் வரதட்சணை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! இத்திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தும் விதமாகவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் இந்திய அரசால் 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் முதன் முதலாக கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து 2023- 2024 ஏப்ரல் முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்களும் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவிகளும் கலந்து கொண்டனர். இப்பேரணியை, மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் வரதட்சணை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் எஸ்பி மீனா, ஆர்டிஓ யுரேகா, மாவட்ட சமூகதல அலுவலர் சுகிர்தா தேவி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அறிவுறுத்தல் மயிலாடுதுறையில் வரதட்சணை ஒழிப்பு தின பேரணி appeared first on Dinakaran.

Tags : Dowry Abolition Day ,Mayiladuthurai ,District Collector ,Mahabharathi ,Dowry Abolition Day rally ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...