×

சொத்துக்குவிப்பு வழக்கு அமைச்சர் விடுவிப்பை எதிர்த்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லைமை நீதிபதி தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். இல்லையென்றால் அவர் உத்தரவிடும் நீதிபதிதான் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க முடியும்.

அவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவு ஏதேனும் பிறப்பித்திருந்தால் அந்த உத்தரவு நகலை தங்களுக்கு ஏன் வழங்கவில்லை என்று வாதிட்டார். இதனையடுத்து, உத்தரவு நகலை தங்கம் தென்னரசு தரப்புக்கு வழங்க பதிவு துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சொத்துக்குவிப்பு வழக்கு அமைச்சர் விடுவிப்பை எதிர்த்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Principal Sessions Court ,Williputhur ,Thangam Tenarasu ,
× RELATED வில்லிபுத்தூர் பகுதிகளில் வெண்டைகளை...