×

மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய குழு ஆய்வு

மதுரை, நவ.29: மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் நலன், சம்பளம், பாதுகாப்பு முறைகள் மற்றும் பிரச்னைகள், குறைகள் குறித்து ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் கேட்டறிந்தார். இதன்பின்னர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுக்கு முன்பு கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் ரூ.432 ஒப்பந்த ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த சம்பளம் ரூ.500க்கும் மேலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகையை சம்பளமாக அரியர்சுடன் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ முறையாக கடைபிடித்து வழங்க வேண்டும். குரூப் இன்சூரன்ஸ், பணியாளர்களுக்கு கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதை கைவிட வேண்டும். அந்தந்த மாநில அரசுகளே சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் மூலம் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்து சம்பளம் வழங்க வேண்டும்.

இதனால் பணியாளர்கள் நலன் காக்கப்படும். முறைகேடுகள் தவிர்க்கப்படும். இவ்வாறு கூறினார். பேட்டியின் போது டிஆர்ஓ சக்திவேல், டீன் ரத்னவேல், ஆர்எம்ஓ சரவணன், ஏஆர்எம்ஓ பொற்முருகுசெல்வி ஆகியோர் உடனிருந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 600 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மூன்று ஷிப்டுகளில் செக்யூரிட்டி பணி முதல் மருத்துவமனை தூய்மை வரை என ஆண்கள், பெண்கள் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : National Cleanliness Staff Welfare Committee ,Madurai ,Government Hospital ,Madurai Government Hospital ,Dinakaran ,
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு