×

கற்காத்தக்குடி ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.29: கற்காத்தகுடி ஊராட்சி கிராமமக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கற்காத்தக்குடியில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகளை குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களிடம் இப்பகுதியில் குடிநீர் சீராக வருகிறதா, மின் இணைப்பு வசதி, சாலை வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். முதலமைச்சர், கிராமப்புற மக்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காணும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் திட்டங்களை தேர்ந்தெடுத்து பயனடைய வேண்டுமென பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன்,ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமுல் ஜாமியா ராஜேந்திரன், கற்காத்தக்குடி ஊராட்சி தலைவர் ஜோசப் சங்கீதா மற்றும் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் பிற துறை அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கற்காத்தக்குடி ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Kalkathakkudi panchayat ,RS ,Mangalam ,Collector ,Vishnu Chandran ,Calcuttagudi Panchayat ,R.S.Mangalam Panchayat Union ,Kalkathakudi Panchayat ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் சந்தையில் மிளகாய்...