×

உடல் உறுப்பு தானம் செய்த மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல்

கூடலூர், நவ. 29: கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் மணிவாசகன் என்பவரது மகன் பரத்குமார்(19). கல்லூரி மாணவர். இவர் கடந்த 24ம் தேதி பைக் விபத்தில் படுகாயமடைந்ததை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மூளைசாவு அடைந்ததால் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பரத்தின் பெற்றோர்கள் தானம் அளித்தனர்.

இந்நிலையில் உடல் உறுப்பு தானம் வழங்கிய பரத்குமாரின் பெற்றோரை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில், திமுக வார்டு கவுன்சிலர்கள் சுபத்ரா சொக்கராஜா, வளர்மதி சரவணன், விஜயலட்சுமி மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது திமுக மூத்த வழக்கறிஞர் துரைநெப்போலியன், வேளாளப்பெருமக்கள் மத்திய சங்க தலைவர் கே.வி.பி.முருகேசன், ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் வேல்பாண்டியன் மற்றும திமுகவினர் உடனிருந்தனர்.

The post உடல் உறுப்பு தானம் செய்த மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Bharat Kumar ,Manivasakan ,Kambam Bharatiyar ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...