×

சாத்தூர் ஒன்றிய அரசுப்பள்ளிகளின் மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம்

விருதுநகர், நவ.29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், போதைப்பொருட்களை தடுத்தல், மாணவர்களுக்கிடையே சாதி வேறுபாடுகளை களைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பள்ளி மேலாண்மைக்குழு இணைந்து செயல்படுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும் முன்னுரிமை அடிப்படையில் முதல் 5 தேவைகள் பட்டியலிட்டு அதை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளியின் தேவைகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்களுடன் கலந்து பேசி பள்ளி அளவில் சரி செய்வது, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் போக்குவரத்து வசதிகள், கழிப்பிட வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் வழங்கினார். சிறந்த செயல்பாடுகளை கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு தெரிவித்தார். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சாத்தூர் ஒன்றிய அரசுப்பள்ளிகளின் மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chatur Union Government Schools Management Board Advisory Meeting ,Virudhunagar ,Chatur Panchayat Union Government Schools ,Virudhunagar Collector's Office ,Chatur Union Government Schools ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி