×

இந்தியா விரும்பினால் விண்வெளி நிலையம் அமைக்க ஒத்துழைப்பு: – நாசா நிர்வாகி உறுதி

புதுடெல்லி: இந்தியா விரும்பினால் விண்வெளி நிலையம் அமைப்பதில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பில் நெல்சன், அமெரிக்காவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

விண்வெளி வீரரை நாசா தேர்வு செய்யாது. விண்வெளி வீரரை இஸ்ரோ தேர்வு செய்யும். இந்தியா விரும்பினால் விண்வெளி நிலையத்தை அமைப்பதில் அமெரிக்க ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. ஒரு வணிக விண்வெளிநிலையத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2040ம் ஆண்டுக்குள் இந்தியா வணிக விண்வெளி நிலையத்தை உருவாக்க விரும்புகிறது. இந்தியா விரும்பினால் நிச்சயமாக நாங்கள் ஒத்துழைப்போம் என்றார்.

The post இந்தியா விரும்பினால் விண்வெளி நிலையம் அமைக்க ஒத்துழைப்பு: – நாசா நிர்வாகி உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,NASA ,NEW DELHI ,Administrator ,Bill Nelson ,Dinakaran ,
× RELATED 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் நடந்த...