×

கே.சி.பழனிசாமி தொடர்ந்தது எடப்பாடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும்: ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதால் எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியில் இருந்து உறுப்பினர் நீக்கம் தொடர்பான நடைமுறைகளையும், கே.சி.பழனிசாமியை ஜெயலலிதா நீக்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

ஆனால் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு மற்றும் கே.சி.பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அவதூறு வழக்கை ரத்து செய்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ட பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தொடர்ந்து விசாரக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post கே.சி.பழனிசாமி தொடர்ந்தது எடப்பாடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும்: ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : K. C. Palanisamy ,Edappadi ,George Town Court ,Chennai ,Akkatsi ,Adimuka General ,Edapadi Palanisami ,K. ,C. ,Palanisami ,K. C. Palanisami ,Dinakaran ,
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்