×

வெளிநாட்டுக்காரர் வாங்கிய நிலம் மோசடி பெண்ணுக்கு ஓராண்டு சிறை

ஆவடி: சுவீடன் நாட்டை சேர்ந்தவர் பூர்வார்டு ஊல்சன். இவர், கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது, சென்னை என்ஜிஓ காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பேரில், கடந்த 2005ம் ஆண்டு, சோழிங்கநல்லூர் பகுதியில் சுமார் 1800 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். சென்னைக்கு வந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால், கடந்த 2006ம் ஆண்டு, கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சங்கரராஜன், விஜயலக்ஷ்மி தம்பதிக்கு பவர் பாத்திரம் எழுதி கொடுத்துள்ளார். மேலும் அந்த இடத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பள்ளி நிறுவ வேண்டும் என்பதே பூர்வார்டு ஊல்சனின் எண்ணமாக இருந்துள்ளது.

இந்நிலையில் தம்பதி இருவரும் பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி பூர்வார்டு ஊல்சனுக்கு சொந்தமான இடத்திற்கு ரூ.72 லட்சத்தை பெற்று மற்றொருவருக்கு விற்று மோசடி செய்ததாக ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவில் அவர் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்து வந்தது. சங்கரராஜன் சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவரது மனைவி விஜயலக்ஷ்மிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

The post வெளிநாட்டுக்காரர் வாங்கிய நிலம் மோசடி பெண்ணுக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Purvard Ulsson ,Sweden ,India ,Chennai ,Colony ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது...