×

மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று முதல், இரவு நேர மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (29ம் தேதி) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:55 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Beach ,Tambaram ,Dinakaran ,
× RELATED சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை...