×

சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை கால்நடை மருந்தகம் எல்லைக்குட்பட்ட ஸ்ரீகாவேரிராஜபேட்டை, நெடியம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட சாமந்தவாடா கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருத்தணி கோட்ட உதவி இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் முகுந்தன, பரணி, கால்நடை ஆய்வாளர்கள் பார்த்தசாரதி, சரவணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அமுதா, நரசிம்மன் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலட்டுத்தன்மை சிகிச்சை அளித்தனர். கலப்பின கிடாரிகள் பேரணி நடத்தி சிறந்த கன்றுகளுக்கு முதல் மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் 170 விவசாயிகள் மற்றும் 1410 கால்நடைகள் பயனடைந்ததாக கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் தாமோதரன் தெரிவித்தார். இதில், கிராம மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்துகொண்டனர்.

The post சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Animal Health Awareness Camp ,Pallipattu ,Srikaverirajapet ,Podhaturpet ,Samanthavada village ,Nediam ,Special Livestock Health Awareness Camp ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை