×

சாலை பணியில் ஈடுபட்ட 14 வாகனங்களை எரித்த நக்சல்: சட்டீஸ்கரில் அட்டூழியம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை நக்சல் தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர்.சட்டீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம், பன்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள், பன்சி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தற்காலிக முகாமில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நக்சல் தீவிரவாதிகள் இங்கிருந்த வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 5 லாரிகள், 4 பிக்-அப் வாகனங்கள், ஒரு ஜேசிபி, ஒரு கிரேன், 2 தண்ணீர் லாரிகள், ஒரு கலவை இயந்திரம் ஆகியவை தீயில் கருகியதாக போலீசார் தெரிவித்தனர். தீவைப்பு சம்பவத்தில், முகாமில் இருந்த யாரும் காயம் அடையவில்லை. தப்பியோடிய நக்சல்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சாலை பணியில் ஈடுபட்ட 14 வாகனங்களை எரித்த நக்சல்: சட்டீஸ்கரில் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Naxals ,Chhattisgarh ,Raipur ,Naxal ,Dinakaran ,
× RELATED 7 நக்சல்கள் சுட்டுக்கொலை