×

கால்நடை பராமரிப்புத்துறையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ேநற்று  தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் ஜவஹர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஞானசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கால்நடை பராமரிப்புத்துறையில் 23 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Animal Husbandry Department ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu government ,Chief Secretariat ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல்...