×

அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கரம் வாலிபரை வழிமடக்கி சரமாரி வெட்டு: 2 பைக்கில் வந்த 6 பேர் கும்பல் வெறிச்செயல்

அம்பத்தூர்: சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் யஸ்வந்த். தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று நள்ளிரவு புழலில் இருந்து அம்பத்தூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அம்பத்தூர் அடுத்த புதூர் அருகே சென்றபோது, அவரை பின் தொடர்ந்து 2 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள், யஸ்வந்தை வழி மடக்கி கீழே தள்ளினர். பின்னர் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் யஸ்வந்தின் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் கட்டுப்பட்டு அறைக்கு தெரியப்படுத்தினர்.

உடனே அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த யஸ்வந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் தனிப்படை போலீசார், யஸ்வந்தை பின் தொடர்ந்து வந்தவர்கள் யார், எதற்காக வெட்டினார்கள், முன் விரோதமா, காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

The post அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கரம் வாலிபரை வழிமடக்கி சரமாரி வெட்டு: 2 பைக்கில் வந்த 6 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Ampathur ,Yaswant ,Perampur, Chennai ,Puzhal ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து