×

தருமபுரி அருகே தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

தருமபுரி: தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஜங்களாபுரம் என்ற இடத்தில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கங்களாபுரம் என்ற இடத்தில் பெங்களூரிலிருந்து கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கீழே குதித்து உயிர்த்தபினர்.

அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைவிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் ஆக போராடி தீயை அனைத்துனர். மேலும் வாகனம் முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது இதனால் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post தருமபுரி அருகே தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jangalapuram ,Dharmapuri-Salem National Highway ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு