×

கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!

கோவை: கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் ஒருவர் நுழைந்து வெளியாகும் சிசிடிவி காட்சி வெளியானது. கொள்ளையன் முகக்கவசம் அணிந்தபடி நகைகளை திருடும் காட்சி வெளியாகியுள்ளது. சுவரில் துளையிட்டு பைப் வழியாக கடைக்குள் நுழைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை தொடர்பாக நகைக்கடையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது. ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைக்கடை கொள்ளை – 5 தனிப்படைகள் அமைப்பு

துணை ஆணையர் சண்முகம் தலைமையில் கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், झोली 1.30 மணியளவில் கடைக்குள் நுழைந்து நகைகள் திருடப்பட்டுள்ளன. 150-200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; விரைவில் கொள்ளையர்கள் கைதுசெய்யப்படுவர். கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

தடயவியல் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முகமூடி எதுவும் அணியாத நபர் ஒருவர் உள்ளே நுழைந்து 2,3 இடங்களில் சிசிடிவி கேமராக்களை துணிகளை கொண்டு மறைத்து கொள்ளை அடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சீரமைப்புப் பணிக்காக சிலர் வந்துள்ளனர்; அவர்களையும் விசாரிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

The post கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kandipuram Road, Goa ,Unions ,KOWAI KANDHIPURAM ROAD ,José Alucas ,Ghandipuram Road, Goa ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்