×

சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம்

சென்னை: சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. சேரி என்ற கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சேரி என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்த நடிகை குஷ்பூ வீட்டை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு அறிவித்திருந்தது. நடிகை குஷ்பூ மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இருக்கும் இடமோ என்னவோ அந்த பழக்க தோஷத்தில் குஷ்பூ சேரி மொழி என்று பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதித்திருக்கிறார். குஷ்பூவின் திமிர்த்தனமான சேரி மொழி என்ற கருத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்.

எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.,எஸ்டி., பிரிவின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவுத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் காமராஜர் சாலைக்கு அருகில் அமைந்துள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. சேரி என்ற கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து குஷ்பு அளித்த பெட்டியில்; நான் தவறாக பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். யாருக்கும் பயந்து நான் பதிவிட்ட பதிவை நீக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மீண்டும் திட்டவட்டமாக பேசியுள்ளார்.

The post சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Khushbu ,Santhome ,Chennai ,Khushpu ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...