×

சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து தீர்ப்பு

சென்னை : சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வ கணபதி.அந்த காலகட்டத்தில் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுடுகாட்டுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதாக சிபிஐ சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததால், தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார்..

The post சுடுகாட்டு ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,Selvaganapati ,Sudugattu ,Chennai ,Supreme Court ,Sudugattu scandal ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...