×

இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து இந்தியர்கள் மலேசியா செல்ல விசா தேவையில்லை

கோலாலம்பூர்: இலங்கை, தாய்லாந்து நாடுகளை தொடர்ந்து மலேசியா செல்லவும் இந்தியர்களுக்குவிசா தேவையில்லை. மலேசிய பிரதமரும், அந்நாட்டு நிதியமைச்சருமான அன்வர் இப்ராகிம் இந்தியாவிலிருந்து மலேசியா வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அன்வர் இப்ராகிம் தெரிவிக்கையில், ‘இந்தியா உள்ளிட்ட ஆசியான் அமைப்பு நாட்டவர்கள் சுற்றுலா, வணிகம், பொது வருகை போன்றவற்றுக்கு விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும். குற்ற பின்னணி கொண்டவர்கள், தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

அதற்காக குடியேற்ற பிரிவில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொள்வார்கள்’ என்று தெரிவித்தார். ஏற்கனவே இலங்கை, தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து இந்தியர்கள் மலேசியா செல்ல விசா தேவையில்லை appeared first on Dinakaran.

Tags : Indians ,Sri Lanka ,Thailand ,Malaysia ,KOLALAMPUR ,Finance Minister ,Anwar Ibrahim ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...