×

எல்லை பயிற்சிகளை தொடர மியான்மர் போர் நிறுத்தத்திற்கு சீனா வலியுறுத்தல்

பீஜிங்: தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மர் அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சீனா உடனான வர்த்தகத்தை பெரிதும் நம்பியுள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை கடந்த 2021ம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில், கடந்த மாதம் சீனா உடனான மியான்மரின் எல்லையில் பல பகுதிகளை அந்நாட்டின் இனப் போராளிகளின் குழுக்கள் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து அங்கு அரசுக்கும் இனப் போராளிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில், மியான்மரில் நடக்கும் போரை நிறுத்த சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சீன ராணுவத்தின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீனர்களை இலக்காக கொண்டு நடத்தப்படும் சைபர் குற்றங்கள் குறித்து சீனா மிகவும் கவலை கொண்டுள்ளது. மியான்மரில் போரிடும் அனைத்து குழுக்களும் போரை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்பவும் நிலைமை மேலும் மோசமாவதை தடுக்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ‘’ என்று கூறப்பட்டுள்ளது.

The post எல்லை பயிற்சிகளை தொடர மியான்மர் போர் நிறுத்தத்திற்கு சீனா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : China ,Myanmar ,BEIJING ,SOUTHEAST ,Dinakaran ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...