×

கூனியூரில் வேளாண் சிறப்பு முகாம்

வீரவநல்லூர்,நவ.28: சேரன்மகாதேவியை அடுத்த கூனியூரில் நெல்லில் வேளாண் சுற்றுசூழல் பகுப்பாய்வு குறித்த பண்ணைப்பள்ளி முகாம் நடந்தது. சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெல்லில் வேளாண் சுற்றுசூழல் பகுப்பாய்வு குறித்த பண்ணைப்பள்ளி முகாம் கூனியூர் கிராமத்தில் நடந்தது. முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து கிசான் கிரெடிட் கார்டு பெறுவது, பிசான பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வது மற்றும் பண்ணைப்பள்ளியின் முக்கியவத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். விவசாய ஆலோசகர் சங்கரநயினார் நெல் நாற்றங்கால் தொழில்நுட்பம், விதை நேர்த்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதிஸ்குமார் உழவன் செயலி பயன்பாடுகள், மண் வள அட்டையின் முக்கியவத்துவம் குறித்து விளக்கமளித்தார். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கணேசன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தினர்.

The post கூனியூரில் வேளாண் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Agricultural Specialization Camp ,Cooneyur ,Veeravanallur ,Cheranmahadevi ,Cheranmahadevi Regional Agriculture… ,Dinakaran ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி