×

கருங்கல் அருகே குளத்தை ஆக்ரமித்து கட்டிய சுற்றுச்சுவர் அகற்றம்

கருங்கல், நவ.28: கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிக்குளத்தின் கரையை ஆக்ரமித்து வீடு மற்றும் சுற்றுச்சுவர் கட்டியிருப்பதாக பாலூர் பகுதியை சேர்ந்த வினோத் பாபு என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ததில் குளத்தின் கரையை ஆக்ரமித்து வீட்டின் ஒரு பகுதியும், சுற்றுச்சுவரும் கட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அந்த நபருக்கு ஆக்ரமிப்பு அகற்ற ஊராட்சி சார்பில் ேநாட்டீஸ் அனுப்பப்பட்டது. பதிவு தபாலில் ஊராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீசை வாங்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முள்ளங்கினாவிளை ஊராட்சி தலைவி பிரபா, கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமராவதி மற்றும் அதிகாரிகள் ெபாக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்ரமிப்பை அகற்ற வந்தனர். கருங்கல் எஸ்ஐ மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த பெண் தாங்கள் குடியிருக்கும் வீடு என்பதால் அதை அகற்ற தங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால் ஏற்கனவே பலமுறை தெரிவித்தும் நீங்கள் ஆக்ரமிப்பை அகற்றவில்லை. வீட்டை மட்டும் வேண்டும் என்றால் அகற்ற ஒரு வாரம் அவகாசம் தரலாம் என்று தெரிவித்தனர். பின்னர் வீட்டின் சுற்று சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post கருங்கல் அருகே குளத்தை ஆக்ரமித்து கட்டிய சுற்றுச்சுவர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Chettikulam ,Mullinginavilai ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா