×

காய்கறி மார்க்கெட் அகற்றத்திற்கு எதிர்ப்பு: மதுரை மாநகராட்சியை வியாபாரிகள் முற்றுகை

மதுரை, நவ. 28: மதுரை அரசரடி ஒத்தக்கடை பகுதியில் சாலையோரமாக பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து இப்பகுதியில் உள்ள 12 காய்கறி கடைகளை அகற்றினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக்கூறி 62வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தலைமையில் காய்கறி வியாபாரிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். தொடர்ந்து வியாபாரிகள் அதே இடத்தில் மீண்டும் காய்கறி மார்க்கெட் அமைக்க கோரி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலனிடம் மனு கொடுத்தனர். அவர் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

The post காய்கறி மார்க்கெட் அகற்றத்திற்கு எதிர்ப்பு: மதுரை மாநகராட்சியை வியாபாரிகள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Othakada ,Madurai Municipality ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு...