×

மதுரையில் பாரம்பரிய மலர்கள் மையம் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை

மதுரை, நவ. 28: மதுரையில் பாரம்பரிய மலர்கள் மையம் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் பாரம்பரிய மலர்களான மல்லிகை, ரோஜா, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட மலர்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தல், அவற்றின் மகசூலை உயர்த்தி, உற்பத்தியை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் வேளாண் உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மை செயலர் அபூர்வா இந்த மலர்களின் செயல் விளக்க திடல்களை ஆய்வு செய்தார். சாமந்தியில் வெள்ளை நிற ‘அசோகா’ ரகம், சம்பங்கியில் பிரபலமான ‘ரஜினிகாந்தா’ ரகம் மற்றும் கோழிக் கொண்டையில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரகங்களையும் ஆய்வு செய்தார். அவற்றின் ஏற்றுமதி வணிகம் மற்றும் கோழிக்கொண்டையில் ரகங்களையும், தேர்வு செய்து செயல் விளக்க திடல்களில் பரிசோதித்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மதுரை மாவட்டத்தில் தனிச்சிறப்பு பெற்ற மல்லிகை மலரில் உள்ள அனைத்து ரகங்களையும் மலர்கள், மகத்துவ மையத்தின் வாயிலாக ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தாதேவி, துணை இயக்குனர் ரேவதி, பண்ணை மேலாளர் மதுபாலா மற்றும் வட்டார அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post மதுரையில் பாரம்பரிய மலர்கள் மையம் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது