×

மண்டபத்தில் சேதமடைந்த நிழற்குடை இடித்து அகற்ற கோரிக்கை

மண்டபம்,நவ.28: பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இருப்பதால் நிழற்குடையை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் அருகே களஞ்சியம் முனியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து உச்சிப்புளிவரை செல்லும் நகர் பேருந்து இந்த பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி விட்டு செல்லும்.

ஆதலால் பயணிகளின் வசதிக்காக இங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சிமெண்டால் கட்டப்பட்டதாகும். இதனால் கட்டிடம் தற்போது தன்மை இழந்து நிழற்குடையின் மேல் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் மேல் பகுதி விழுந்து விடும். ஆதலால் பயணிகள் ஏதும் நிழற்குடையில் நிற்கும் பட்சத்தில் நிழற்குடை மேல்தளம் இடிந்து விழுந்து உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்த நிழற்குடையை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்களும் அப்பகுதியில் வசித்து பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபத்தில் சேதமடைந்த நிழற்குடை இடித்து அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Dinakaran ,
× RELATED மண்டபம் பகுதியில் தூண்டில் வளைவு...