×

ராமநாதபுரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம், நவ.28: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக விவசாயிகள் மனு அளித்தனர். அதன் பிறகு அலுவலகத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆதி மூலம் விளக்கி பேசினார்.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட வேளாண் நிலங்களை பாதிக்க கூடிய திட்டங்களை அரசு அனுமதிக்கக் கூடாது. நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். முல்லை பெரியாறு, வைகை, கிருதுமால், பரளையாறு, குண்டாறு பாசன நிலங்களுக்கு பாசன உத்தரவு வழங்க வேண்டும், நீர் நிலைகள், வரத்து கால்வாய்களில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மதுரை மண்டல தலைவர் மதுரை வீரன் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,People's Grievance Day ,Ramanathapuram Collector ,Tamil Nadu ,
× RELATED மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார்