×

ராஜபாளையத்தில் வரதட்சணை எதிர்ப்பு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

 

ராஜபாளையம், நவ.28: ராஜபாளையத்தில் குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராஜபாளையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 மற்றும் வரதட்சணை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக வரதட்சணை மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெண் கல்வி, பெண்களுக்கான திருமண வயது, வரதட்சணை தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு நடைபெற்ற பேரணியில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியைகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலை, நேரு சிலை, பஞ்சு மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, தென்காசி சாலை, காந்தி கலை மன்றம் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்து ஜவகர் மைதானத்தில் நிறைவடைந்தது.

The post ராஜபாளையத்தில் வரதட்சணை எதிர்ப்பு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anti-dowry rally in Rajapalayam ,Rajapalayam ,Dinakaran ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!