×

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு

கன்னியாகுமரி, நவ.28: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடந்தது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. இதையொட்டி இரவு 10 மணிக்கு கோயில் மேல்சாந்திகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடத்தினர். பின்னர் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோயிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும்,அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு appeared first on Dinakaran.

Tags : Goddess ,Kanyakumari ,Bhagwati ,Karthika Deepatri festival ,Bhagwati Amman ,Tamil Nadu ,Goddess Kanyakumari Bhagwati ,
× RELATED காளை விடும் திருவிழாவில் ஆக்ரோஷமாக...