×

சீர்மரபினர் நல வாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: சீர்மரபினர் நல வாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சீர்மரபினர் நல வாரியம், அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், ராசா.அருண்மொழி துணை தலைவராகவும், கே.எஸ்.ராஜ்கவுண்டர், சேகர், பசுவை சக்திவேல், முனுசாமி, எஸ்.கணேசன், கே.எஸ்.கண்ணன், கதிர்வேல், பண்ணப்பட்டி கோவிந்தராஜ், ப.சந்திரன், சூர்யா பி.தங்கராஜா, பெரி.துரைராசு, பாண்டீஸ்வரி மற்றும் பெரியசாமி ஆகிய 13 அரசு சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து 3 ஆண்டு காலத்திற்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சீர்மரபினர் நல வாரிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Welfare Board ,CHENNAI ,Seermarapinar Welfare Board ,Minority ,Welfare Department ,
× RELATED அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு...