×

திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம்

 

திருத்தணி: திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக ஒன்றிய செயலாளர் தெரிவித்துள்ளார். திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருத்தணி அடுத்த திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் கனகம்மாசத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகமுகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள், பாக முகவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK West Union ,Tiruvalangadu ,Union ,DMK ,West Union ,Tiruvalangadu West Union ,Dinakaran ,
× RELATED திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்...