×

சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் சஸ்பெண்டான விஏஓ கைது

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமம் இருளர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். கூலித்தொழிலாளி. இவரது கணவர் கடந்த 2014ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண், தனது மாமியாருடன் அதே ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று தனது கணவர் இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதற்கு கெடார் அடுத்த போரூர் ஊராட்சி துறவிதாங்கள் கிராமத்தை சேர்ந்த விஏஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் (49), லஞ்சமாக ரூ.3,000 பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கினார்.

இவரது மகனும், 5ம் வகுப்பு படித்து வருவதால், அரசின் மூலம் ரூ.4,000 உதவித்தொகை கிடைக்கும் என்பதால் மீண்டும் விஏஓ ஆரோக்கிய பாஸ்கரராஜை அணுகி தனது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது சான்றிதழ் வேண்டும் என்றால் என்னுடம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், விஏஓ ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

The post சான்றிதழ் கேட்டு சென்ற பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் சஸ்பெண்டான விஏஓ கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Kandachipuram ,Nallapalayam ,Villupuram district ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!