×

மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், நொகனூர் வனப்பகுதியில் இருந்து, தாவரகரை அருகே நேற்று முன்தினம் உணவு தேடி வந்த போது, அதிமுக நகர செயலாளரும், தற்போதைய மாநகர கவுன்சிலருமான பால்நாராயணன் என்பவர் நிலத்தில் மின் வயரை கடித்த பெண் யானை, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதன் பிரேத பரிசோதனை நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கால்நடை மருத்துவர் செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கை இன்று (28ம் தேதி) கிடைத்த பின்னர், நில உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் பால்நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dhenkanikottai ,Nokanur ,Krishnagiri district ,Thavarakarai ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு