×

மண்டல அளவிலான கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு: எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தளபதி கே.வினாயகம் மகளிர் கலை – அறிவியல் கல்லூரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட வாலிபால் அசோசிஷியன் ஆகியவை இணைந்து கல்லுாரி வளாகத்தில் வடக்கு மண்டல அளவிலான சீனியர் ஆண்கள் மாநில வாலிபால் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து வந்த அணிகள் விளையாடின.

இந்த விளையாட்டுப் போட்டிக்கு மாவட்ட வாலிபால் அசோசிஷியன் செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பாரதி அனைவரையும் வரவேற்றார். அரக்கோணம் முன்னாள் எம்பி திருத்தணி கோ.அரி, திருத்தணி பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண், தளபதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.பாலாஜி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இறுதி போட்டியை திருத்தணி தாசில்தார் மதன் தொடங்கி வைத்தார்.

இறுதி போட்டியில் சென்னை ஐசிஎப் அணி வெற்றி பெற்றது. 2வது இடத்தை சென்னை எஸ்ஆர்எம் அணி பிடித்தது. சென்னை ஐசிஎப் அணிக்கு அதன் கேப்டனிடம் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். 2வது இடத்தைப் பிடித்த சென்னை எஸ்ஆர்எம் அணிக்கு திருத்தணி பீகாக் மருத்துவமனையின் நிறுவனர் ஸ்ரீ கிரண் கோப்பை மற்றும் பரிசு வழங்கினார்.

3வது இடத்தைப் பிடித்த ராணிப்பேட்டை தேசிங்கு அணிக்கு தளபதி கல்விக்குழும தலைவர் ச.பாலாஜி கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். இந்த போட்டியை திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் அசோக்குமார், வழக்கறிஞர்கள் கிஷோர் ரெட்டி, சீனிவாசன், திமுக பேச்சாளர் மூர்த்தி, ஷெரிப், சித்திக், பாஜ பிரமுகர் பிரபு குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மண்டல அளவிலான கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிக்கு பரிசு: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Thalapathy K.Vinayakam Women's College of Arts and Sciences ,Chennai-Tirupati National Highway ,Dinakaran ,
× RELATED சென்னை – திருப்பதி தேசிய...