×

தலசயன பெருமாள் கோயிலுக்கு தனி செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம். கடந்த 1998ம் ஆண்டு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 25 ஆண்டை கடந்தும் இன்னும் கும்பாபிஷேகம் நடக்க வில்லை.

இந்நிலையில், திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடந்த தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் இருந்து அர்ச்சகர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் யாக குண்டம் வளர்த்து, கடைசி நாளான 21ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது. தற்போது, உபயதாரர் மூலம் ரூ.1.15 கோடி மதிப்பில் பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஆனால், இப்பணிகளை துரிதப்படுத்த கோயிலுக்கு தனி செயல் அலுவலர் இல்லை. ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே, தலசயன பெருமாள் கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனி செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தலசயன பெருமாள் கோயிலுக்கு தனி செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thalasayana Perumal temple ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...