×
Saravana Stores

எஸ்ஆர்எம் கல்லூரியில் வள்ளலார் பிறந்தநாள் கருத்தரங்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளையொட்டி, பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி சார்பில், தமிழ்ப்பேராயம் நடத்தும் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘வள்ளலார் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்’ என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் கலையியல் கல்லூரி புலத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர், கலந்து கொண்டு அமுதசுரபி நாளிதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இயற்றிய அமுதசுரபி மாத இதழின் முதல் பதிப்பை வெளியிட்டார். பின்னர், அவர் கூறுகையில், ‘எந்த பல்கலை கழகமும், கல்லூரியும், தமிழுக்காக ஒரு துறையை உறுவாக்கி அதில் உட்பிரிவு தமிழ்ப்பேராயம் தொடங்கி நடத்தவில்லை. தமிழ் மீது கொண்டு உள்ள ஆர்வத்தால் இந்த கல்லூரியில் தமிழ்ப்பேராயம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

அதில், தமிழ் மீது ஆர்வம் உள்ள நபர்களை அழைத்து வந்து பரிசுகளும் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் நடத்தப்படும் தமிழ்ப்பேராயம் ஐந்தாம் தமிழ் சங்கமம் போன்றது. மக்களுக்கு சேவை செய்வது, அன்பு செலுத்துவதும் மட்டுமே ஆன்மிகம். ஆனால் மக்களுக்கான ஆன்மிகத்தை மாறுப்பட்ட சமூக நீதியாக மாற்றி உள்ளார் வள்ளலார் என்பதனை நினைக்கும் போது பெருமை கொள்கிறேன்,’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், எஸ்ஆர்எம் கல்லூரியின் தமிழ்ப்பேராய தலைவர் முனைவர் கரு.நாகராசன், திருமூலர் ஆய்விருக்கை இயக்குநர் மகாலட்சுமி, தமிழ்ப்பேராயத்தின் செயலர் முனைவர் ஜெய்கணேஷ், தமிழ்ப்பேராயத்தின் துணை பேராசிரியர் பாலசுப்பிரமணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வள்ளலார் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் பற்றிய கட்டுரைகள் எழுதி வந்த வள்ளலாரின் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

The post எஸ்ஆர்எம் கல்லூரியில் வள்ளலார் பிறந்தநாள் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Vallalar Birthday Seminar ,SRM College ,Chengalpattu ,Vallalar ,SRM ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு...