×

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 32 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு..!!

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 32 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தரகாசி. உத்தரகாசியில் தேசிய நெடுஞ்சாலை பணியின்போது சுரங்கப்பாதை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சுரங்கப்பாதையின் நடுவே மணல் சரிந்ததில் சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். கடந்த 12ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தால் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தற்போது வரை ஆரோக்கியமாக இருந்தாலும், அவர்கள் மீட்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 32 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு பெற்றிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் சையது அடா ஹஸ்னைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திட்டம் B-ன் படி சுரங்கப்பாதையின் மேல் செங்குத்தாக துளையிடும் பணி 32 மீட்டர் வரை முடிந்துள்ளது.

உணவு, ஆக்சிஜன் அனுப்பி உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்கான குழாய், 75 மீட்டர் அளவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 11 மீட்டர் குழாயை செலுத்தினால் தொழிலாளர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிடும். அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிட்டபோது உடைந்து சிக்கியிருந்த பிளேடுகள் அகற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

The post உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான 32 மீட்டர் வரை துளையிடும் பணி நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,subway crash ,Dehradun ,crash ,Dinakaran ,
× RELATED இதுதான் அவங்களோட உண்மை முகம் ஏழைகளின்...