கொழும்பு: இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பதவி நீக்கம் தொடர்பான கடிதத்தை ரோஷன் ரணசிங்கவுக்கு இலங்கை அதிபர் அலுவலகம் அனுப்பியது.
தற்போதைய சூழலில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அதிபர், அவரது ஆலோசகரே பொறுப்பு என ரோஷன் பேசியிருந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரனில், ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை குறிப்பிட்டு பேசிய நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்ததுடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் நிலவி வருகிறது.
The post இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம்..!! appeared first on Dinakaran.