×

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு மொத்தம் 1225.67 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது

இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய 6 அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 29.11.2023 முதல் 28.03.2024 முடிய 120 நாட்களுக்கு மொத்தம் 1225.67 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையம்புத்தூர், மானூர், கோரிக்கடவு, கீரனூர் மற்றும் கோட்டத்துறை ஆகிய கிராமங்களிலுள்ள மொத்தம் 6168 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Palaru Damalaru Dam ,Dindigul ,Palaru Dam ,Dindigul District ,Palani Circle ,Balaru Dam ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை