×

தொடரும் போராட்டம்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது..!!

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி இன்று 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 31 மீட்டர் வரை தோண்டப்பட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. சுரங்கப்பாதையை செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 மீட்டர் வரை துளையிடப்பட்டு அதன்பிறகு புதிய இயந்திரம் வைத்து துளையிடும் பணியானது நடைபெறும். இதற்கான கருவி வரவழைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தரகண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுரங்க விபத்து நேரிட்ட பகுதியில் மழை பெய்தால், செங்குத்தாக துளையிடும் பணிகள் பாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை மழை தொடர்ந்தால், சுரங்கத்திற்குள் ராணுவ வீரர்களைக் கொண்டு பக்கவாட்டில் துளையிடும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மலைப் பகுதியில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் குறைந்த வெப்பநிலையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக மீட்பு முயற்சிகள் இப்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றன. எவ்வாறாயினும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாக மீட்பு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

The post தொடரும் போராட்டம்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Dehradun ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ