×

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர்: கேமரூன் கிரீனை கழற்றிவிட்டு ஹர்திக்கை தூக்கிய மும்பை

மும்பை:17வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல். மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ம்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வீரர்கள் விடுவிப்பு, பரிமாற்றம், தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிப்பதற்காக காலக்கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. அதன்படி ஒருசில வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னணி வீரர்கள் பலர் கழற்றிவிட்டுள்ளனர். குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக தகவல் வெளியானது. ஆனால் நேற்று குஜராத் அணியில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டியா மும்பை அணிக்கு திரும்புவதற்கான வர்த்தகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை 17.25கோடிக்கு மும்பை ஏலம் எடுத்திருந்த நிலையில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு டிரேடிங் செய்துள்ளது.

அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பைஇந்தியன்ஸ் எடுத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஆர்சிபி அணி 11 வீரர்களை விடுவித்ததன் மூலமாக ரூ. 40.75 கோடியை மினிஏலத்திற்கு பர்ஸில் வைத்துள்ளது. மும்பை 11 வீரர்களை கழற்றிவிட்டு ரூ.15.25 கோடி, குஜராத் 8 வீரர்களை விடுவித்து ரூ.13.85 கோடி, லக்னோ 8 வீரர்களை வெளியேற்றி ரூ.13.9 கோடி, சன்ரைசர்ஸ் 6 வீரர்களை விடுவித்து ரூ.34 கோடி, கேகேஆர் 16 வீரர்களை விடுவித்து ரூ. 32.7 கோடி, சிஎஸ்கே 9 பேரை விடுவித்து ரூ. 31.4 கோடியை கையில் வைத்துள்ளது. டெல்லி 11 வீரர்களை விடுவித்து ரூ.28.95 கோடி ராஜஸ்தான் 9 வீரர்களை விடுவித்து ரூ.14.5 கோடி, பஞ்சாப் ரூ.29.1 கோடியுடன் மினி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர்: கேமரூன் கிரீனை கழற்றிவிட்டு ஹர்திக்கை தூக்கிய மும்பை appeared first on Dinakaran.

Tags : 2024 IPL series ,Mumbai ,Cameron Green ,Hardik ,IPL ,2024 ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!