×

உருவானது காற்றழுத்தம்… டிசம்பர் 1ம் தேதி புயலாக வலுப்பெறும் .. புயலுக்கு மிக்ஜாம் என பெயர் சூட்டிய வானிலை மையம்!!

சென்னை : அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுப்பெற்று டிசம்பர் 1ம் தேதி புயலாக வலுப்பெறுகிறது. வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் 2வது புயல் உருவாகிறது. வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் ஏற்கனவே மிதிலி புயல் உருவானது.புதிய புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த michaumg என்ற பெயர் வைங்கப்படும்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கனமழை, கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.இதனிடைய ஜனவரி முதல்வாரம் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்றும் இன்று சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

The post உருவானது காற்றழுத்தம்… டிசம்பர் 1ம் தேதி புயலாக வலுப்பெறும் .. புயலுக்கு மிக்ஜாம் என பெயர் சூட்டிய வானிலை மையம்!! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,Andaman ,Gulf of Chennai ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...