×

ஐயப்ப சீசன் எதிரொலி வாழை இலை விலை கிடுகிடு

*கட்டு ரூ.1,200 ஆக உயர்வு

பெரியகுளம் : ஐயப்ப சீசனையொட்டி வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கட்டு ரூ.1,200 வரை செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கரில் வாழை விவசாயம் நடக்கிறது. வாழைத்தார் அறுவடை செய்த பின்பு வளர்ந்து வரும் வாழை மரங்களில், 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு வாழை இலைகளை அறுவடை செய்வது வழக்கம்.

இப்பகுதியில் பெய்து வரும் பரவலான மழையால் வாழைகள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. தற்போது வாழை இலை அறுவடை நடந்து வருகிறது. ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்திற்கு முன் ஒரு வாழை இலைக்கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகி வந்தது. தற்போது ஒரு கட்டு ரூ.1,200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு கட்டு ரூ.2,500க்கு விலை போனது. ஆனால், இந்த ஆண்டு ரூ.1,200க்கு விற்கிறது. இந்த விலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். விலை உயரவும் வாய்ப்புள்ளது’’ என்றனர்.

The post ஐயப்ப சீசன் எதிரொலி வாழை இலை விலை கிடுகிடு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Aiyappa ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி