×

ஒரே நாளில் 720 புதிய வாகனங்கள் பதிவான விவகாரம்: சர்ச்சையில் சிக்கிய பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம்

சென்னை: வாகனங்களுக்கான புதிய ஆயுள்வரி அமலாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரே நாளில் 720 வாகனங்களை பதிவு செய்து சென்னை பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 முதல் 125 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அக்டோபர் 31ம் தேதி அன்று வியக்க வைக்கும் விதமாக பூந்தமல்லி வாட்டர போக்குவரத்து அலுவலகம் 720 வாகனங்களை பதிவு செய்துள்ளது. பொதுவாக 8 மணி நேரம் வேலை நேரத்தில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் பதிவு செய்யப்படும். ஆனால் அக்டோபர் 31 அன்று பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு வாகனத்தை பதிவு செய்துள்ளது.

ஒரே நாளில் 720 வாகன பதிவு சாத்தியமில்லாத ஒன்று என்கிறார்கள் ஆட்டோ மொபைல் டீலர்கள். ஒரு வாகன ஆய்வாளர் ஒரு வாகனத்திற்கு 3 நிமிடங்கள் மட்டுமே செலவழித்து இடைவெளியின்றி பணிபுரிந்தால் கூட 720 வானங்களை ஆய்விட்டு பதிவு செய்ய 36 மணிநேரம் ஆகும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் சாதாரண நாட்களை விட 2 முதல் 2.5 மடங்கு வரை வாகனங்கள் அதிகம் பதிவாகி இருப்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. பூந்தமல்லியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரே நாளில் 720 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் வாகனங்களை சரிவர ஆய்வு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் முழு பதிவு நடைமுறையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆட்டோ மொபைல் டீலர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வாகனப் பதிவு விழுக்காடு அதிகரித்து இருப்பது பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாடு சட்டசபையில் மோட்டார் வாகன ஆயுள்வரி மசோதா நிறைவேற்றப்பட்ட அக்டோபர் 11ம் தேதிக்கும், அமலுக்கு வந்த நவம்பர் 8ம் தேதிக்கும் இடையே ரெட்ஹில்ஸ், சோழிங்கநல்லூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புத்தூர் உள்ளிட்ட நகர வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

The post ஒரே நாளில் 720 புதிய வாகனங்கள் பதிவான விவகாரம்: சர்ச்சையில் சிக்கிய பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Poovindavalli ,transport office ,Chennai ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...